ராஜபக்ஷ குடும்பத்தில் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதியானது…!

image_pdfimage_print

ராஜபக்ஷ சகோதரர்களுள் ஒருவருக்கு கோவிட் தொற்று …

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சமல் ராஜபக்சவுக்கு இன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு்ள்ளது.

இதனையடுத்து அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.