தனது அம்மாவிற்கு திருமணம் நடத்தி வைத்த 8 வயது மகன்!

image_pdfimage_print

தாய்க்கு திருமணம் நடத்திய மகன்…

இந்தியா-தமிழகத்தின் மதுரையில் கல்லூரி பேராசிரியை ஒருவர் தன்னுடைய எட்டு வயது மகனின் கையால் தாலியைப் பெற்று மறுமணம் செய்து கொண்ட நெ.கிழ்ச்சியான சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் சுபாஷினி ராஜேந்திரன். கல்லூரி ஒன்றில் ஆங்கிலத் துறை பேராசிரியையாக பணிபுரிந்து வரும் இவர் விவாகரத்து பெற்று 9 வயது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஓவியர் ஆதிஸ். தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் ஓவியர் ஆதிசும், சுபாஷினி ராஜேந்திரனும் திருமணம் செய்ய முடிவெடுத்து, குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்தனர்.

நிகழ்வில் தாலியை சுபாஷினியின் மகன் தர்ஷன் எடுத்துக் கொடுக்க, மணமகன் மணமகள் சுபாஷினியின் கழுத்தில் கட்டினார். 
இந்நிலையில் தனது மகனின் கையால் தாலியைப் பெற்ற பேராசிரியை திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.