நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் சேவையில்…!

image_pdfimage_print

தபால் நிலையங்களும் சேவையில்…!

நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களும் நேற்று (10) முதல் ஏழு நாட்களுக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் ஓய்வூதியம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தபால் நிலையங்கள் திறக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.