கொழும்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை…!

கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…

கொழும்பு பகுதியில் கோவிட் மாறுபாடு நிச்சயமாக வரக்கூடும் என கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி கூறியுள்ளார்.

மேலும் கோவிட் மாறுபாடுகளின் மிகவும் ஆபத்தான தென்னாபிரிக்க மாறுபாடான C.1.2 கொழும்பில் பரவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டவர்கள் பாரியளவில் நாட்டிற்கு வருவதனால் இந்த ஆபத்தான மாறுபாடு பரவுக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு நகர் பகுதியில் பொருளாதார ரீதியில் அதிகமான மக்கள் பயணிக்கும் சந்தர்ப்பம் உள்ளது என்பதனால் பாரிய ஆபத்துக்கள் உள்ளதென அவர் மேலும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக கொழும்பு நகரத்திற்கு எந்தவொரு மாறுபாடும் நுழையக்கூடும் என்பதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி மேலும் அறிவித்துள்ளார்.