இலங்கையில் வயிற்றில் உள்ள கருவை கலைக்க கோரி வைத்தியசாலை செல்லும் பல பெண்கள்…வெளியான தகவல்..!

image_pdfimage_print

வைத்தியரின் கோரிக்கையை தவறாக புரிந்து கொண்ட பெண்கள்…!

நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்கள் பலர் தங்கள் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வைத்தியர்களிடம் கோரிக்கை விடுப்பதாக மகளிர் வைத்திய நிபுணர் சனத் லெனரோல் கூறியுள்ளார்.

கொவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் வரை கர்ப்பம் தரிப்பதனை ஒருவருடம் தாமதப்படுத்துமாறு அண்மையில் விசேட வைத்தியர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை தவறாக புரிந்துக் கொண்டமையின் காரணமாக கர்ப்பிணி பெண்கள் இவ்வாறு வைத்தியரை நாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சட்டத்திற்கமைய தாயின் உயிருக்கு ஆபத்தாக இருந்தால் மாத்திரமே கரு கலைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொவிட் தொற்று உலகிற்கு வந்த புதிய நோயாகும். உலகம் முழுவதும் அதன் செயற்பாடு பற்றிய வரையறுக்கப்பட்ட தரவுகள் மாத்திரமே இன்னமும் உள்ளது. மேலும் ஒரு வருடத்திற்குள் விஞ்ஞானிகள் அதற்கு புதிய தடுப்பூசி அல்லது மருந்தை உருவாக்க முடியும்.

ஒரு வருட கர்ப்பத்தை தாமதப்படுத்துவது தாய்க்கும் கருப்பையில் வளரும் குழந்தைக்கும் நன்மையை ஏற்படுத்தும் என நிபுணர் தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்திருந்தார்கள்.

இந்த விடயம் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் உடனடியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதன் மூலம் வயிற்றில் வளரும் குழந்தை அல்லது தாய் கொவிட் தொற்றினாலும் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும் என மகளிர் வைத்திய நிபுணர் சனத் லெனரோல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.