இலங்கை மக்களின் மாத வருமானத்தில் 5 வீதம் வரி அறவிட வேண்டும்…வர்த்தக அமைச்சரின் கோரிக்கை…!

image_pdfimage_print

அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன…

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நெருக்கடிக்கு மத்தியில் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் பொது சேவைகளை நடத்தி செல்ல பொது மக்களின் மாதாந்த வருமானத்தில் 5 வீதம் வரி அறவிட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

ஒரு லட்சத்திற்கு அதிக மாதாந்த சம்பளம் பெறும் அனைவருக்கும் இந்த வரி விதிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை ஊடக நிகழ்வு ஒன்றில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக நலத்துறைகளின் பராமரிப்புக்கான குறைந்தபட்ச “சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு” என கூறி நூற்றுக்கு 5 வீதம் வரி விதிக்க வேண்டும்.

வருமான மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் சராசரியாக ஒரு லட்சத்திற்கு மேல் மாத வருமானம் உள்ள அனைவரிடமிருக்கும் இந்த வரி விதிக்கப்பட வேண்டும்” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.