குடித்து விட்டு மதுபோதையில் கும்பலாக அட்டகாசம் செய்த இராஜாங்க அமைச்சர்…!

image_pdfimage_print

இராஜாங்க அமைச்சரின் அட்டகாசம்..

இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுடன் மதுபோதையில், வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து சிறை மற்றும் தூக்கு மேடைக்குச் சென்று அட்டகாசம் செய்ததாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது இராஜாங்க அமைச்சர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும், நடக்க முடியாத நிலையில் இருந்த அவரது நண்பர்கள் சிலரை சிறைக்குள் செல்ல அனுமதி மறுத்த சிறை அதிகாரிகளை தவறாகப் பேசியதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை சிரேஷ்ட சிறை அதிகாரியொருவர் இச்சம்பவம் நடந்ததை உறுதி செய்தாலும், மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என்றும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் சிறைச்சாலை முகாமையாளர் மற்றும் சிறை மறுவாழ்வு அமைச்சின் செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்டபோது, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே சம்பந்தப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை என்றும் சம்பவத்தின் போது அங்கு அவர் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.