துயர் பகிர்கின்றோம்;

image_pdfimage_print

முல்லை கல்வி வலய ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்; திரு.ச.மைக்கல் திலகராசா…

முல்லைத்தீவு கல்வி வலயத்தின் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் (சுகாதாரமும் உடற்கல்வியும்) அமரர் சந்தியா மைக்கல் திலகராசா நேற்று 12/09/2021 உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

புதுக்குடியிருப்பு 10 ம் வட்டாரத்தை வசிப்பிடாக கொண்ட இவர், மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மற்றும் மு/வித்தியானந்த கல்லூரி ஆகியவற்றில் கணிசமான காலம் ஆசிரியராக கடமையாற்றி குறித்த பாடசாலைகளில் விளையாட்டுத்துறை மேம்படுத்த அரும்பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் சுயநலம் பாரத அர்பணிப்பான சேவைகள் மற்றும் சமூக பணிகள் சொல்ல வார்த்தை இல்லை, முல்லைத்தீவு கல்வி வலயத்தில் நீண்டகாலமாக உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி பல தேசிய மட்ட சாதனைகளை மாணவர்கள் அடைய வழிகாட்டியவர்.

அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்,