நாட்டில் விசேட தேவையுள்ள சிறுவர்களுக்கு ஏற்றப்படும் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்..!

image_pdfimage_print

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு அடுத்த வாரம் முதல் தடுப்பூசி…

இலங்கையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு அடுத்த வாரம் முதல் Pfizer தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். 4 மில்லியன் Pfizer தடுப்பூசிகள் மேலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கான விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கான பரிந்துரை கிடைத்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் Pfizer தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.