“நாம் சிறிமா பண்டாரநாயக்கவை தூக்கிச் சென்றோம்..”மைத்திரி வெளியிட்ட சுவாரசிய தகவல்…!

மைத்திரி வெளியிட்ட சுவாரசிய தகவல்…!

இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் எதிர்நோக்கிய சவால்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேன வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதனை எதிர்த்து கோட்டை பகுதியில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சிறிமா பண்டாரநாயக்க அமர்ந்திருந்த இடத்திற்கு எதிரில் கண்ணீர் புகைக்குண்டு ஒன்று வந்து வீழ்ந்தது. நாம் சிறிமா பண்டாரநாயக்கவை அந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக தூக்கிச் சென்றோம்.
எங்களையும் பிடிக்கத்தான் பார்த்தார்கள் நாங்கள் அங்கும் இங்கும் ஓடினோம். நான் ஒர் இடத்தில் ஒளிந்திருந்தேன் மாலையாகும் வரையில் அந்த இடத்தில் ஒளிந்திருந்தேன்.

இந்த நாட்களில் நான் வீட்டில் இருந்து கொண்டு புத்தகங்களை வாசிக்கின்றேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு பஞ்சிகாவத்தை பகுதியில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் அபயசிங்காராம விஹாரையின் விஹாராதிபதி மஹாவத்தே சுபோத தேரருடன் கலந்துரையாடிய போது இந்த கடந்த கால சுவாரஸ்மான தகவல்களை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.