தடுப்பூசி செலுத்துவதால் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனையா..? தெளிவுப்படுத்தும் சன்ன ஜயசுமன..!

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன….

அன்மை காலமாக தடுப்பூசி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என இலங்கை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எந்தவொரு தடுப்பூசியையும் இளைஞர், யுவதிகள் பயமின்றி பெற்றுக்கொள்ளலாம் என தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டால் பாலியல் ரீதியாக பலம் குறைவடைவதாகவும், பிள்ளைகளை பெற்றுக் கொள்ள முடியாமல் போவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் காரணமாகவே இளைஞர், யுவதிகள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் தாமதம் காட்டுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.