பாலியல் விடுதி நடத்திய இரு பெண்கள் உட்பட மூவர் கைது..!

image_pdfimage_print

பாலியல் விடுதி நடத்திய பெண்கள் கைது…!

தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவத்துகொட பகுதியில் பாலியல் விடுதி ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது பெண்கள் இருவர் உட்பட மூவரைத் தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விடுதியை நடத்தி வந்தவர் மற்றும்  விடுதியை நடத்திச் செல்வதற்கு உதவிய பெண்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனக்குறிப்பிடப்படுகின்றது.

மேலும் கண்டி, சீதுவ மற்றும் தங்கெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 42, 46, 39 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.