மஹிந்தவின் கோட்டைக்குள் தாக்குதல் முயற்சி; திடீரென ஏற்பட்ட பரபரப்பு!

image_pdfimage_print

கொழும்பு உள்ளிட்ட இடங்களில் திடீரென பாதுகாப்பு…

நாட்டின் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் திடீரென பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் , அம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, தங்காலை காவல்நிலையத்தின் பல அதிகாரிகள் இன்று மத்தள விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கொழும்பிலுள்ள சில முக்கிய இடங்களுக்குமான பாதுகாப்பு அதிகரிக்கபபட்டுள்ளதென பாதுகாப்பு உயர்பீடத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. எனினும், இந்த தாக்குதல் தொடர்பிலான தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பங்களாதேஷில் தாக்குதலொன்று இடம்பெறப் போவதாக எச்சரிக்கை தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே இலங்கையிலும் இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.