யாழில் நடந்த கோரம்..விபத்தில் பலியான இளைஞன்..!

image_pdfimage_print

விபத்தில் இளைஞன் பலி…!

யாழ்-கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவன் நேற்று (14) உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம், இயற்றாலை பகுதியை சேர்ந்த ராஜன் சிந்துஜன் (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத்தெரிவிக்கப்படுகின்றது.

இயற்றாலை பகுதியில் நேற்று இரவு 09.30 மணி அளவில் இந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.