14 வயது சிறுமிக்கு வீட்டில் பிறந்த குழந்தை…!

கண்டியில்…

கண்டி, பூஜாபிட்டிய பகுதியில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 29 வயதான திருமணமான நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் வசிக்கும் சிறுமி மேற்பட்ட சந்தேகநபருடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்துள்ள நிலையில், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இதன் விளைவாக சிறுமி கர்ப்பமடைந்துள்ள நிலையில், தான் கருவுற்றிருப்பதை வீட்டாருக்கு தெரிவிக்காமல் மூடிமறைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், சில நாட்களுக்கு முன்பு சிறுமி தனது வீட்டிலேயே குழந்தையொன்றை பிரசவித்துள்ள நிலையில், கடுமையான இரத்தப்போக்கு காரணமாக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கலகெதரவைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் பிறந்த குழந்தையின் மரபணு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, சந்தேகநபர் இன்று கலகெதர நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பூஜாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.