முல்லைத்தீவில் இன்று ஏற்பட்ட விபத்து;ஆபத்தான நிலையில் உள்ள இளைஞன்..!

image_pdfimage_print

விபத்தில் சிக்கிய இளைஞன்…

முல்லைத்தீவில் கூட்டுறவு சங்க தலைவரின் வாகனம் மோதியதில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கரைத்துறைப்பற்று கூட்டுறவு சங்கத்தின் தலைவரின் கப் வாகனம் மோதியதில் நீராவிப்பிட்டியை சேர்ந்த 22 வயதுடைய சல்மான் என்ற இளைஞனே படுகாயம் அடைந்துள்ளார் எனத்தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அவர் ஆபத்தான நிலையில் மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த விபத்து இன்று தண்ணீரூற்றில் இருந்து குமுழுமுனை செல்லும் வீதியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை முள்ளியவளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.