இலங்கையில் எப்போது நீக்கப்படுகிறது ஊரடங்கு? வெளியான தகவல்..!

இலங்கையில் எப்போது நீக்கப்படுகிறது ஊரடங்கு?

இலங்கை முழுவதும் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அக்டோபர் மாதம் முதலாம் திகதி நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கோவிட் ஒழிப்பு செயலணியின் விசேட கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார வழிகள் என்பன எந்த காரணம் கொண்டும் பாதிக்காத வகையில் அத்தியாவசிய சேவைகளை முன்னர் போன்று தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, அனைத்துப் பொருளாதார மத்திய நிலையங்களையும் தொடர்ந்து திறந்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.