எதிர்பாராமல் வந்த லொறி…பரிதாபமாக இருவர் பலி..!

விபத்தில் இருவர் பலி…

திஸ்ஸமஹராம சதுன்கம, முதியம்மாகம பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று லொறிய ஒன்றுடன் மோதியதில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்று வலது பக்கத்திற்கு திருப்ப முற்பட்ட சந்தர்ப்பத்தில் எதிரில் வந்த லொறி ஒன்றுடன் மோதி அருகில் இருந்த மதிலில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர் எனத்தெரிவிக்கப்படுகின்றது.