பல வருடங்களின் பின்னர் குடும்பத்துடன் இணைந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி!

image_pdfimage_print

தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை…!

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 16ம் திகதி அன்று விடுவிக்கப்பட்ட அரசியல் கைதியான நடேசு குகநாதன் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டில் உள்ள தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளார்.

நேற்றைய தினம் காலை வீட்டிற்கு வந்த அவர் குடும்பத்துடன் இணைந்துகொண்டுள்ளார் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலையாகி, மூன்று மாதங்களின் பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு தாக்கல் செய்யப்படாமலே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடேசு குகநாதன் கடந்த 16ம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் தனது வீட்டினை சென்றடைந்து குடும்பத்துடன் சேர்ந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.