77 வயதான நபரால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.

image_pdfimage_print

சிறுமிக்கு நேர்ந்த சோகம்…

பலாங்கொடைப் பிரதேசத்தில் 12 வயது சிறுமியை 71 வயதான நபர் துஷ்பிரயோகம் செய்து, கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தால் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் ஹரமிட்டிகல பிரதேசத்தில் நடந்துள்ளது.

அப்பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையத்திற்கு சென்ற சிறுமி, சில மாதங்களாக தனக்கு மாதவிடாய் நிகழவில்லையென தெரிவித்துள்ளார்.

தாயாருடன் சிகிச்சைக்கு வருமாறு வைத்தியர் தெரிவித்ததை தொடர்ந்து, தனது தாயாருடன் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவர்களை பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியர் அனுப்பியுள்ளார்.

சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அச்சிறுமி 5 மாத கர்ப்பிணியென்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியதில், சிறுமியின் 71 வயது முதிந்த தாத்தாவே துஸ்பிரியோகம் செய்தது தெரிய வந்துள்ளது.

சிறுமி தற்போது, பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் தாத்தா கைது செய்யப்பட்டு, பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அவர் இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.