ஐ.நாவில் கோத்தாபாயவின் உரை; அமெரிக்க வாழ் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்..!

ஐ.நாவில் கோட்டாபாயவின் உரை…

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றவுள்ள நிலையில் அமெரிக்க வாழ் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய அமெரிக்காவில் உள்ள இலங்கையர்கள் நியூயோர்க் நகரில் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் அரசியல் எதிரிகளின் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என கோரியும் இவர்கள் போராட்டதை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.