மணல் லொறியுடன் மோதியதில் ஒருவர் மரணம்…!

விபத்தில் ஒருவர் மரணம்…

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்வெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.

மாட்டு பட்டியலில் இருந்து கிண்ணியாவுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் கிண்ணியாவில் இருந்து தம்பலகாமம் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.

கிண்ணியா – நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.