குளக்கரையில் கிடந்த சடலம்…!

பம்பைமடு குளப்பகுதியில் மீட்கப்பட்ட சடலம் …

இன்று வவுனியா, பம்பைமடு குளப்பகுதியில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மீன் பிடிப்பதற்காக நேற்று (22) காலை தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

நெடு நேரமாகியும் வீடுதிரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் குளத்துப் பகுதியில் தேடியுள்ளனர்.

இதன்போது குளக்கரையில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.

55 வயதுடைய சிவசோதி என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.