இன்று முதல் நாட்டில் முதல் முறையாக சிறுவர்களுக்கு தடுப்பூசி…!

இன்று முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி…!

நாட்டில் விசேட தேவைகளையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று காலை முதல் கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ஆரம்பமாகியுள்ளன.

சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகளானது, மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி, 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, நாட்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கு முதற்கட்டத் தடுப்பூசி ஏற்றல் இடம்பெறும்.

இரண்டாவதாக 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, ஆரோக்கியமான சிறுவர்களுக்கு, அடுத்தக்கட்டமாக தடுப்பூசி ஏற்றப்படும்.

இதனையடுத்து, 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட ஏனைய சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம், மூன்றாவது படிமுறையாக, விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.