பால்மா,சீமெந்து பொருட்கள் விலை உயர்வு; இன்று வெளியான அறிவித்தல்…!

பால்மா,சீமெந்து பொருட்கள் விலை உயர்வு…

இன்று பால்மா,சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுவது குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

வாழ்க்கைச் செலவு பற்றிய குழு இன்று கூடவுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுவது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

அரிசி, பால்மா, கோதுமைமா, சீமெந்து, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.