“கோத்தாபாயவே திரும்பிப்போ…”ஐநா முன் முழங்கிய சத்தம்..!

image_pdfimage_print

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆர்ப்பாட்டம்…

இலங்கை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச நியு யோர்க் ஐ.நா சபையின் உள்ளே, உள்ளகபொறிமுறை தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது , இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஐ.நாவின் வெளியே குரல் எழுப்பியதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இதன்போது “கோத்தாபாயவே திரும்பிப் போ..”என்ற முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று ஐ.நாவின் முன்னால் மேற்கொண்டிருந்தது.

இதன்போது  ஓர் போர்குற்றவாளியை ஐ.நா தனது அரங்கில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டதனை கண்டு நாங்கள் அதிர்ச்சியடைகின்றோம். இனப்படுகொ.லையாளி ஒமர் அல்-பஷீர் இந்த அரங்கில் உரையாற்றினார் என்ற உண்மையை அறிவோம்.என பலவாறு கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளன.