நாட்டில் பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது எவ்வாறு செயற்பட வேண்டும்? வெளியான விடயம்..!!

நாட்டில் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடிவு…!

இலங்கையில் கோவிட் தொற்று நோய் பரவல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் போது கல்வி செயற்பாடுகள் உறுதியான, வலுவூட்டப்பட்ட அணுகுமுறைகளுடன் இயக்கப்பட வேண்டும் என்று கண்டி தேசிய அடிப்படை கல்வி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அதுல சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று “கோவிட் தொற்றுநோய், மாணவர்கள் மற்றும் அவர்களின் கல்வி” என்ற தலைப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே பேராசிரியர் சுமதிபால இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கூறுகையில், 

பாடசாலை மாணவர்கள் கோவிட் காரணமாக மந்தமான கல்வி மற்றும் மந்தமான மனநிலைக்கு ஆளாக நேரிடும்.

எனவே இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க அனைத்து பிரிவினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

பாடசாலைகளுக்கு திரும்பும் மாணவர்கள் மீது ஆசிரியர்கள் தங்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் மற்றும் அவர்களின் மன வேதனைகளைப் புரிந்து கொண்டு அவர்களை அன்புடனும், அக்கறையுடனும் கையாள வேண்டும்.

இந்த காலகட்டத்தில் பெற்றோர்களும் பொறுமை மற்றும் புரிதலுடன் செயல்பட வேண்டும்.

மாணவர்களின் மன நிலையை அதிகரிக்க உதவுவதற்காக, அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது ஊடக நிறுவனங்களின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் குழந்தை மருத்துவ நிபுணர் பேராசிரியர் சமன்மாலி சுமனசேன, கல்வி என்பது ஒரு பரந்த பாடமாக இருப்பதை உணர வேண்டும், வகுப்பறை நடவடிக்கைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை.

ஒரு குழந்தை வயிற்றில் வளரும் போது கல்வியை உள்வாங்குகிறது. எனவே, பாடசாலைகள் மட்டுமின்றி முழு சுற்றுப்புறமும் குழந்தைகளின் கற்றல் இடமாக உள்ளது. ஏனெனில் அது அவர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.