மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் நிகழ்வு

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று…

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

யாழிற்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், வடக்கு மாகாண அவைத்தலைவர், யாழ் மாநகர முதல்வர் உள்ளிட்டவர்கள் பங்கேற்று இந்த நிகழ்வை நடத்தியுள்ளனர்.