தனது ஒன்றரை மாத குழந்தையை கோடாரியால் வெட்டி கொ.லை செய்த கொடூர தாய்..!

அனுராதபுரத்தில் நடந்த கொடூரம்…!

அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட – ஷ்ரவஸ்திபுர பகுதியில் இளம் தாய் ஒருவர் தனது ஒன்றரை மாத குழந்தையை கோடாரியால் வெட்டிக் கொ.லை செய்த கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது .

இன்று பகல் வேளையில் , பட்டதாரி ஆசிரியையான 30 வயதுடைய குறித்த பெண் , தனது ஒரு மாதமும் 20 நாட்களும் நிரம்பிய குழந்தையை இவ்வாறு கொடூரமாக வெட்டிக் கொ.லை செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் தனது குழந்தையை கொ.லை செய்த பின்னர் , குறித்த பெண் , கல்னேவ பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளதாகவும் , அத்துடன் அங்கு வைத்து அவரை பொலிசார் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கொ.லை செய்யப்பட்ட குழந்தையின் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சரணடைந்த தாய் விசாரணைகளுக்காக அனுராதபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.