வவுனியாவில் இளைஞன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை…!

image_pdfimage_print

வவுனியாவில்…

வவுனியா – கூமாங்குளம் பிரதேசத்தில் வீடொன்றில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது கூமாங்குளம் பல்லவன் வீதியை சேர்ந்த 30 வயதுடைய சின்னையா ஜெசிந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த இளைஞர் நேற்று இரவு கூமாங்குளத்தில் உள்ள தனது அம்மம்மாவின் வீட்டில் இரவு நித்திரைக்கு சென்றுள்ள நிலையில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

எனினும் மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.