விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்…!

image_pdfimage_print

விபத்தில் பெண் ஒருவர் மரணம்…!

கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் வழுக்கிச் சென்ற காரணத்தினால் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் ஒருவர் கீழே விழ்ந்து கண்டேனர் ஒன்றின் சில்லில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த விபத்தில் கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் கண்டேனர் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.