அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி! எடுக்கப்படும் இறுதி தீர்மானம்..!

image_pdfimage_print

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த கூட்டத்தின் போது பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.