உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் முதன் முறையாக இலங்கையை வந்தடைந்தது..!

எவர் க்றீன் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது…

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ´EVER ACE´ கப்பல் நேற்று (05) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.

கொழும்பு துறைமுகம் உட்பட உலகின் 24 துறைமுகங்களுக்கு மட்டுமே இந்த கப்பலால் பயணிக்க முடியும் என்பது விஷேட அம்சமாகும்.

´EVER ACE´ கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழையும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என துறைமுக ஆணையகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது இலங்கை வணிகக் கப்பல் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.