நாட்டில் சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – மண்சரிவு அபாயம்..!

மண்சரிவு அபாயம்..!

இலங்கையில் பல்வேறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பகுதிக்கும், இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கேகாலை, களுத்துறை மாவட்டங்களில் சில பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.