வாடகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நபர் !பொலீசாரின் தீவிர விசாரணை..!

யாழில்…!

யாழ்ப்பாணம் அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சடலமாக மீட்கப்பட்ட நபர் காத்தான்குடி அமானுல்லா வீதியைச் சேர்ந்த ஆதாம்பாவா முகம்மது றவுஸ் (வயது- 46) என்பவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று காலை அவர் அறையிலிருந்து வெளியில் வராத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்துவருகின்றனர்.