“இதுவரை அரசு செய்த தவறுகள் மற்றும் பிழைகளை திருத்தவும் நடவடிக்கை எடுப்பேன்..” கோட்டாபாயவின் அதிரடி முடிவு…!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அதிரடி முடிவு…

எதிர்வரும் 3 வருடங்களுக்குள் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்துக் கொண்ட ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதன் போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “எந்த தயக்கமும் இல்லாமல் கடினமான முடிவுகளை எடுத்து மக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மஹா சங்கத்தினரால் எதிர்பார்ப்பதை ஒரு பங்கு கூட குறைக்காமல் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்.

இதுவரை அரசு செய்த தவறுகள் மற்றும் பிழைகளை திருத்தவும் நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து நான் வேலை செய்வதில்லை. நான் அந்த தீர்மானத்தை மக்களுக்கு அறிவித்துள்ளேன்” என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.