உலக கறுப்பு பட்டியலில் இடம்பிடிக்கவுள்ள ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு முக்கிய நபர்..!

உலக கறுப்பு பட்டியலில் இடம்பிடிக்கும் ராஜபக்ஷ குடும்பம்..!

ஒரு நாள் ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான உதயங்க வீரதுங்கவும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மோசடி தொடர்பான சர்வதேச பட்டியலில் இடம்பெறுவார் என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஒரு நாள் ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான உதயங்கவீரதுங்கவும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மோசடி தொடர்பான சர்வதேச பட்டியலில் இடம்பெறுவார்”.

இதன் மூலம் மிக் விமானக்கொள்வனவில் ராஜபக்சவிற்கு உள்ள தொடர்பு குறித்து நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவினர் சரியான விதத்திலேயே செயற்பட்டனர் என்பதும், இந்த மோசடியை அம்பலப்படுத்தியமைக்காகவே எனது தந்தை கொல்லப்பட்டார் என்பதும் நிரூபணமாகும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவினர் ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்து மிகவும் சரியான விதத்தில் செயற்பட்டார்கள் என்பதை பண்டோரா பேப்பர் விவகாரம் உறுதி செய்துள்ளது என அகிம்சா விக்கிரமதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.