“எனக்கு அரசியல் அனுபவம் குறைவு”அண்ணனை நம்பி ஆட்சி நடத்தும் கோட்டாபாய..!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய…

நீண்ட காலம் அரசியலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தின், உறுப்பினராக இருந்த போதிலும் தனக்கு தனிப்பட்ட ரீதியில் அரசியல் அனுபவம் குறைவு என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 60 ஆண்டுக்கும் மேற்பட்ட அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) அரசியல் தலையீடுகளை, தான் அதிகளவில் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதன் போது தான் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர், அரசியல் அனுபவங்களை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.