ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உறவினரான திருக்குமார் நடேசனை விசாரிக்க விசேட குழு…!

திருக்குமார் நடேசனை விசாரிக்க விசேட குழு…!

பன்டோரா பத்திரிகையில் சர்ச்சைக்குள்ளானமை தொடர்பில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உறவினரான முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசனை விசாரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசேட குழுவை அமைத்துள்ளது.

இதற்கமைய ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நுவன் அசங்கவின் மேற்பார்வை மற்றும் ஆலோசனைக்கு அமைய ஐவர் கொண்ட சிறப்புக்குழு இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று முற்பகல் வேளையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள திருக்குமார் நடேசனிடம் ஆணைக்குழுவினர் விசேட வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்து கொள்ளவுள்ளனர்.