ராகலையில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து – குழந்தைகள் உட்பட ஓரே குடும்பத்தில் 5 பேர் பலி..!

ராகலையில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து…!

ராகலையில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஆர்.ராமையா (55 வயது), அவரின் மனைவியான முத்துலெட்சுமி (வயது 50), இவர்களின் மகள் டிவனியா (வயது 35), குறித்த மகளின் பிள்ளைகள் இருவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. 

மேலும், உயிரிழந்த ஆர்.ராமையாவின் மகனான ரவீந்திரன் (வயது 30) சம்பவத்தில் உயிர் தப்பியுள்ளதுடன், 35 வயது பெண்ணின் கணவர் சம்பவத்தின் போது வீட்டில் இருக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ராகலை மேற்பிரிவிலுள்ள தனி வீடொன்றில் நேற்று இரவு தீப்பரவல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது. 

உயிரிழந்த சிறுவர்கள் ஒரு வயது மற்றும் 11 வயதை உடையவர்கள் என தகவல்கள் தெரிவிப்பதுடன், மேலும் இரு ஆண்களும், பெண்ணொருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

தீப்பரவலுக்கான காரணம் உள்ளிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.