உலக ஒலிம்பிக் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள முதல் இலங்கைத் தமிழர்!

சர்வதேச ஒலிம்பிக் பொதுச்சபையில் உரையாற்றும் இலங்கைத் தமிழர்…

உலக ஒலிம்பிக் பொதுச்சபைக் கூட்டத்தின் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை தமிழர் ஒருவர் உரையாற்ற்றவுள்ளார்.

யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த சிவராஜா கோபிராஜே இவ்வாறு சர்வதேச ஒலிம்பிக் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையற்றவுள்ளார். ஒக்டோபர் மாதம் பிற்பகுதியில் மெய்நிகர் வழியூடாக நடத்தப்படும் நிகழ்விலே இவ்வாறு உரையாற்றவுள்ளார்.

சிவராஜா கோபிராஜ் இலங்கை ஒலிம்பிக் சம்மேளனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் ஊடகத்துறை முகாமையாளராக கடமையாற்றிவரும் இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.