கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணிப் பெண்களுக்கு முக்கிய அறிவித்தல்…!

கர்ப்பிணிப் பெண்களுக்கு முக்கிய அறிவித்தல்…!

கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்டுக்கு பிந்தைய நோய் நிலைமைகள் பதிவாவதாக மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது ஒரு தீவிர நிலை இல்லை என்றாலும், இதற்கு உரிய சிகிச்சைகளை எடுப்பது அத்தியாவசியமாகும் என மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருந்து தொிவித்த அவர்,

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 4 வாரங்களின் பின்னர் சுவாச கோளாறு ஏற்பட கூடும். தசை வலி, சோர்வு மற்றும் முழங்கால் வலி போன்ற நிலைமைகள் குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கொவிட் -19 க்கு பிந்தைய நிலை கர்ப்பிணித் தாய்மார்களையும் பாதிக்கிறது என கூறலாம்.

இந்த நிலை 6 மாதங்கள் வரை நீடிக்கும். இது ஒரு தீவிர நிலை அல்ல. இருப்பினும், நீங்கள் கர்ப்பிணித் தாயாக இருந்தால், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தால் கொவிட் நிலை குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட ஏதேனும் சிரமங்கள் இருந்தால், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்தது. என்றார்