சுற்றுலா விடுதியில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்..!

சிறுமி நீரில் மூழ்கி மரணம்…!

பாசிக்குடா சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கண்டி – ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.

இந்த வேளை குடும்பத்தின் பிள்ளைகள் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது ஆறு வயதுடைய சியாம் செய்னப் எனும் சிறுமி நீரில் மூழ்கி பலியானதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இதன் பின்னர் மரணமான சிறுமியின் உடல் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.