நாட்டில் 13,300 ஐ அண்மித்தது கொவிட் மரணங்களின் எண்ணிக்கை…!

கொவிட் மரணங்கள் அதிகரிப்பு…

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (08) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,296 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 524,937 கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 479,629 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.