நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்..!

வெல்லவாய எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நபர் மரணம் ..!

வெல்லவாய எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் பிற்பகல் நண்பர்கள் மூவருடன் குறித்த நபர் நீராடுவதற்காக எல்லவல நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

குறித்த நபர் நீருக்கடியில் இருந்த கற்களுக்கு இடையில் சிக்கி கொண்ட நிலையில், அவரது சடலம் இன்று காலை வெல்லவாய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மாகொடை கந்தானையை வசிப்பிடமாக கொண்ட 38 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த நபரின் சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.