பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய செய்தி..!

பரீட்சைகள் திணைக்களத்தின் தகவல்…

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், பெறுபேறு சான்றிதழ்களை திணைக்களத்திற்கு வருகைத் தராமல் பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்றை பரீட்சைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விடயம் குறித்த அறிவிப்பு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பூஜித் ஜயசுந்தரவின் அறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பெறுபேறு சான்றிதழ்களை பரீட்சைகள் திணைக்களத்தின் WWW.DOENETS.LK என்ற இணையத்தளத்திற்கோ அல்லது DOE என்ற திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ கையடக்கத் தொலைபேசி செயலியின் ஊடாகவோ பிரவேசித்து, பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.