பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்..!

பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..

நாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் துணைவேந்தர்களுடன் கலந்துரையாடி இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.