பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைப்பெண் யொஹானி!

யொஹானி..!

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் பெரிதும் விரும்ம் பார்க்கும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது.

இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் , ஹாலிவூட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15ஆவது சீசன் தற்போது இடம்பெறுகின்றது.

இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா கலந்துகொண்டதுடன், இதன்போது யொஹானி சல்மான் கானுக்கு ‘மெனிகே மகே ஹிதே’ பாடலைச் சொல்லிக்கொடுத்துள்ளார்.

தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.