நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை…!

image_pdfimage_print

வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் எச்சரிக்கை…!

தற்போது நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கொரோனா தொற்றை மறந்து செயற்படும் நிலைமையை காணக்கூடியதாக உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் கமல் பெரேரா கூறியுள்ளார்.

மேலும் டிசம்பர் மாதத்தில் நாட்டில் வசந்த காலத்தை கொண்டு வருவதற்காக மக்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலையை பார்க்க முடிகின்றது.

கொரோனா தொற்றினை மறந்துவிட வேண்டாம். இன்றும் 600 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் மிகவும் போராடுகின்றார்கள் என அவர் மக்களிடம் சுகாதார வழிமுறைகளை பிற்பற்றி நடக்குமாறு வேண்டிக்கொண்டுள்ளார்.