பாராளுமன்ற தியவன்ன ஓயாவில் சடலத்தை இழுத்துச்சென்ற முதலை..!

தியவன்னா ஓயாவில் முதலையில் சிக்கிய உடல்…

இலங்கை பாராளுமன்றத்திற்கருகே உள்ள தியவன்னா ஓயாவில், நபர் ஒருவரின் உடலை முதலை இழுத்துச் சென்ற காட்சிகள் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று மாலை 5.45 மணியளவில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேயில் நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள கிம்புலாவாலா பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தை பதிவு செய்த இளைஞன், முதலை உடலை பாலத்தை நோக்கி இழுத்து பின்னர் பாலத்தின் கீழ் விட்டுச்சென்றதாக கூறியுள்ளார். பின்னர் கிம்புலாவாலா பாலம் அருகே வைத்து கடற்படை அதிகாரிகள் உடலை மீட்டுள்ளனர்.

இன்று இரவு 9.00 மணியளவில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டதுடன், உடல் மேலதிக பரிசோதனைகளுக்காக களுபோவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பலியானவர் 60 வயது முதியவர் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மிரிஹானா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர், உயிரிழந்தவர் யார் என்பது இன்னும் அறியப்படவில்லை.